யாழ். சிறைச்சாலையின் புதிய கட்டடத்தின் 8ஆவது ஆண்டு நிறைவு விழா

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாண சிறைச்சாலை புதிய கட்டடத்தில் நிறுவப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண சிறைச்சாலையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

புதிய சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 8 ஆவது வருடத்தை குறிக்கும் முகமாக தயாரிக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டு நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாண சிறைச்சாலையின் முன்பக்க வளாகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண சிறைச்சாலை மூத்த அதிகாரிகள், சிறைச்சாலை அலுவலர்கள், சிறைச்சாலை காவலர்கள் பங்குபற்றினர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்