யாழ். குருநகர் பகுதியில் பலத்த காற்று: வீடுகள் மற்றும் தேவாலயத்தின் கூரைகள் சேதம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – குருநகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.45 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் கொலை விலக்கி மாதா ஆலயம் மற்றும் பல வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்த அனர்த்தத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவிலும் புனித கொலை விலக்கி மாதா ஆலய திருப்பண்ட அறைகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன. அத்தோடு சில படகுகளும் பகுதி அளவில் சேதமாக்கப்பட்டுள்ளன.

இதேவேளை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க