
யாழ்.கல்லூண்டாயில் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வாள்வெட்டிற்கு இலக்கானவர் வீட்டுக்கு முன்பக்கமாக வீதியில் நின்றவேளையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வாள்வெட்டினை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது.
படுகாயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.