யாழ்.ஓய்வுபெற்ற ஆசிரியர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த கார்த்திகேசு திருப்பதி (வயது – 65) என்பவரே அவரது வீட்டின் மலசல கூடத்தில் எரிகாயங்ஙளுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் வீட்டில் தனிமையில் வசித்து வந்ததாகவும், அவரை தேடி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு சென்ற நபரே, ஆசிரியர் எரிகாயங்களுடன் சடலமாக காணப்பட்டதை அவதானித்த நிலையில் அயலவர்களுடன் இணைந்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதேவேளை குறித்த ஆசிரியரின் மனைவியும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலசல கூடத்தில் வழுக்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்