யாழ் ஏழாலையில் ஆணொருவர் படுகொலை

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழாலை மேற்கு பகுதியில் ஆணொருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டாள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மச்சான் முறையுள்ளவரே இந்த கொலையை மேற்கொண்டதாக தெரியவருகிறது. இந்த கொலையை செய்த சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.