யாழ். உரும்பிராயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, உரும்பிராய்ப் பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

பலாலி வீதியால் கார் ஒன்று பயணித்துக்கொண்டிருந்தது, இதன்போது காருக்கு முன்னால் திடீரென ஒரு துவிச்சக்கர வண்டி குறுக்கே வந்தபோது காரின் சாரதி வாகனத்தை சடுதியாக நிறுத்தியுள்ளார், இதன்போது காருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் காரின் மீது மோதி விபத்து சம்பவித்தது.

இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்து சம்பவம் குறித்த விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.