
யாழ்.உடுவில் பேருந்து நிலையத்திலிருந்து சடலம் மீட்பு!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் உடுவில் பொது நூலகத்துக்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது
மாவை கலட்டி, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை என்ற முகவரியைச் சேர்ந்த சின்னன் தங்கராசா (வயது 74) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த முதியவர் அப்பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக யாசகம் பெற்று வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலத்தை மீட்ட சுன்னாகம் பொலிஸார் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
