
யாழ் இந்துக் கல்லூரியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு
போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான ‘முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ இன்றைய தினம் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனை முன்னிட்டு , யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொலிஸாரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
மாணவர்கள் மத்தியில் போதைப்பொருளின் தாக்கம் எவ்வாறு சமூக மத்தியில் ஏற்படுத்தப்பட்டுகிறது என்பது தொடர்பில் விழிப்புணர்வு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.
