
யாழ்.ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 8:30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
ஆழியவளை, செம்மண் வீதி அருகாமையில் உள்ள சிறிய பற்றைக் காட்டுப் பகுதிக்குள்ளிருந்து, கைக்குண்டு ஒன்றினை புலனாய்வு துறையினர் பாதுகாப்பான முறையில் அகற்றி, மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
