யாழ்.அராலி மேற்கு நீளத்திக்காடு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம்!
-யாழ் நிருபர்-
யாழ்.அராலி மேற்கு நீளத்திக்காடு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது கடந்த ஜீன் 20 அன்று ஆரம்பித்து திருவிழா நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் 7ஆம் திருவிழாவாக நேற்று திங்கட்கிழமை வேட்டைத்திருவிழா இடம்பெற்றது.
அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளியாக வலம் வந்து, அராலி மத்தி பேச்சியம்பாள் ஆலயத்தில் வேட்டைத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த பூஜை வழிபாடுகளை ஆலய பிரதம குருவான துஷ்யந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.
இந்த உற்சவத்தில் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்ட அம்பாளை தரிசித்து அம்பாள் அருளைப் பெற்றுச் சென்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்