யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் எறிகணை மீட்பு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயிலிற்கு அருகாமையில் நேற்றைய தினம் (18) பிற்பகல் 12:00 மணியளவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
குறித்த பகுதியில் வீடு ஒன்றினை நிர்மாணிப்பதற்க்காக அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்தபோது மண்ணில் புதைந்திருந்த நிலையில் எறிகணை ஒன்றினை கண்டுள்ளனர். இந்நிலையில் உடனடியாக கட்டுமான வேலைகளை நிறுத்திவிட்டு சம்பவம் தொடர்பாக மருதங்கேணி போலீஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிற்பகல் 5:00 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி பொலிசார் குறித்த வெடிகுண்டை மீட்டு சென்றுள்ளனர்.

இது யுத்த காலத்தில் ஏவப்பட்ட எறிகணையாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.