யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத் தளபதியின் பிரியாவிடை நிகழ்வு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் முப்படைகளின் தளபதியாக கடமை புரிந்த மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரசிங்கவின் பிரியாவிடை மற்றும் கெளரவிப்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில நடைபெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டு பிரியாவிடைகாணும் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரசிங்க வாழ்த்து பாமாலையும் வழங்கி வைத்தார்.
அத்துடன் ஆலய நிர்வாகத்தினர், அரச அதிகாரிகள் தமது கெளரவிப்பினை வழங்கினர்.
இவ் நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன், யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாநிதி த.சத்தியமூர்த்தி, மற்றும் வடமாகாண பிரதிப் பொலிஸ் அதிபர், மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், உள்ளிட்ட இராணுவ , பொலிஸ் உயர் அதிகாரிகள், இராணுவ உத்தியோகத்தர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.