
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட துஷியா கஜமுகன் இன்று வியாழக்கிழமை அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் தனக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
இவர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் தமது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
