யாழ்ப்பாணம் நோக்கி முன்னெடுக்கப்பட்ட மரக்கடத்தல் முறியடிப்பு

-யாழ் நிருபர்-

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி முன்னெடுக்கப்பட்ட மரக் கடத்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை முறியடிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இருந்து ஏ-35 பிரதான வீதியினூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிறிய ரக லொறியில் மரம் கடத்தல் இடம்பெறுவதாக தருமபுரம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

கிடைத்த தகவலுக்கு அமைவாக தருமபுர பொலிஸார் நேற்றையதினம் வீதி சோதனையை மேற்கொண்ட பொழுது பெறுமதி மிக்க 12 முதிரை மரக்குத்திகளுடன் சிறிய ரக லொறியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • Beta

Beta feature

  • Beta

Beta feature

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க