
யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டம்
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கையெழுத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஐ.எம்.எப். மரணப் பொறியை தோற்கடிப்போம், ரணில் – மோடி திருட்டு ஒப்பந்தம் வேண்டாம், எனும் தொனிப்பொருளில் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
