யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

 

யாழ்ப்பாணம் – அராலி வீதி, பொம்மைவெளி பகுதியில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் 7 கிராம் 500 மில்லிகிராம் கஞ்சா இருந்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் அராலி தெற்கு வட்டுகோட்டையை சேர்ந்தவர் எனவும், மேலதிக விசாரணையின் பின்னர் அவரை நாளை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.