யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை

-யாழ் நிருபர்-

கடந்த 20.10.2023 அன்று வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் – கீரிமலை வீதி, நல்லிணக்கபுரம் என்ற முகவரியில் வசித்து வந்த தேவராசா சூசைதாசன் (வயது – 46) என்பவர் கடந்த 20.10.2023 அன்று மேற்படி முகவரியில் உள்ள அவரது வீட்டில் இருந்த வர்த்தக விடயமாக கொழும்புக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் புறப்பட்டு சென்றதில் இருந்து 5ஆவது நாள் அவரது கைப்பேசி இயங்கவில்லை. இதன் காரணமாக மனைவி இது குறித்து காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 2024.02.01 அன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார். எனினும் இதுவரை குறித்த குடும்பஸ்தரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவர் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் 0766348367, 0740910152, 0763934822 என்ற இலக்கங்களில் ஏதாவது ஒரு இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்குமாறு குடும்பத்தவர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.