யாழில் 24 மணிநேரமும் பொழியும் பனி

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் 24 மணிநேரமும் பனிப்பெய்து வருகிறது. இதனால் அசாதாரண காலநிலை நிலவுகிறது.

தொடர்ச்சியாக பனிப்பெய்து வருவதால் அன்றாட கடமைகளை மக்கள் கஷ்டத்தின் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்ச்சியான பனி காரணமாக தடிமல், இருமல், சளி போன்ற நோய்களாலும் மக்கள் அவஸ்தை படுவதை அவதானிக்க முடிகின்றது.