யாழில் 108.460 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம், பள்ளிக்குடா பகுதியில் 108.460 கிலோ கேரள கஞ்சா வைத்திருந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மன்னார், யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் மல்லாவி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 35 முதல் 41 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணக் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்