யாழில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

யாழில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் வைத்து அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுடைய இரண்டு இளைஞர்கள் இவ்வாறு ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.எஸ்.ராமநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஒருவரிடமிருந்து 50 கிராம் ஹெரோயினும், மற்றையவரிடமிருந்து ஆயிரம் மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News