யாழில் வெடி பொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு, நாச்சிமார் வீதியில் உள்ள காணி ஒன்றில் வெடிபொருட்கள் கண்டறிப்பட்டன. குறித்த காணியை துப்பரவு போது இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. மானிப்பாய் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து குறித்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்ட பின்னர் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.