யாழில் வீதியில் துரத்தி துரத்தி வெட்டி கொலை : அறுவர் கைது!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அறுவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட நபர் வீதியில் சென்றுகொண்டிருந்தவேளை குறித்த குழுவினர் அவரை துரத்தி துரத்தி தாக்குதல் நடாத்தினர்.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்டவரது கால் பாதம் துண்டாடப்பட்டது.

பின்னர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இதன்போது கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், கத்தி மற்றும் ஆடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.