யாழில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக 12பேர் பாதிப்பு!

-யாழ் நிருபர்-

யாழில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக 12பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியில் சேதமடைந்துள்ளது.

அதேபோல உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியில் சேதமடைந்துள்ளது.

மேலும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியில் சேதமடைந்துள்ளது.

இதேவேளை திடீரென வீசிய புயல் காற்றினால் செல்வச் சந்நிதி ஆலயத் திருவிழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளின் கூரைகள்
தூக்கி வீசப்பட்டன. இதனால் வியாபாரிகள் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டனர்.