யாழில் வாழைப்பழத்திற்கு வந்த மவுசு

-யாழ் நிருபர்-

யாழில் வாழைப்பழங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோரால் தெரிவிக்கப்படுகிறது.

சமகாலத்தில் ஆலய மஹோற்சவங்கள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையிலேயே, இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கதலி வாழைப்பழம் ஒரு கிலோ 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.