யாழில் வாள்வெட்டு ஒருவர் படுகாயம்
-யாழ் நிருபர்-
யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தபாற்பெட்டி சந்தி பகுதியில் இன்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில், அரியாலை பகுதியைச் சேர்ந்த தர்மரத்தினம் கணேஸ்வரன் (வயது-42) என்பவரே வீதியில் சென்றுகொண்டிருந்த போது இனம்தெரியாத கும்பல் ஒன்றினால் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
வாள்வெட்டினை மேற்கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை யாழ் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.