
யாழில் வாந்தி எடுத்த குடும்பஸ்தர் திடீரென உயரிழப்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். தாவடி தெற்கு, கொக்குவிலைச் சேர்ந்த திரவியம் சிறிதரன்(வயது – 53)என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இ.போ.சபையின் கோண்டாவில் சாலையில் சாரதியாகக் கடமையாற்றும் அவர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை வேலைக்குச் சென்றபோது தலைச்சுற்று ஏற்பட்டதன் காரணமாக வீட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர் வீட்டில் வாந்தி எடுத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் மாலை உயிரிழந்துள்ளார்.