யாழில் ரயிலில் சிக்கி யுவதியின் ஒரு கால் பறிபோனது
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ரயில் நிலையத்தில், ரயிலில் சிக்கி யுவதி ஒருவரது ஒரு கால் நேற்று வியாழக்கிழமை பறிபோயுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த யுவதி தாமதமாக வந்ததால் ரயில் புறப்பட ஆரம்பித்துள்ளது. இதன்போது ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்தவேளை திடீரென கால் தடக்கி விழுந்ததால் ஒரு கால் ரயிலில் சிக்கியது.
இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் குறித்த யுவதி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.