யாழில் முச்சக்கர வண்டி மோதியதில் வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

-யாழ் நிருபர்-

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக முச்சக்கர வண்டி மோதி வயோதிப பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

சண்டிலிப்பாய் மத்தியைச் சேர்ந்த பெண்ணே (வயது 80) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், குறித்த பெண் வீதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். இதன்போது வீதியில் வேகமாக வந்த முச்சக்கர வண்டி அவர்மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.

இந்நிலையில் சிகிச்சைக்காக சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை இடையிலேயே அவர் உயிரிழந்தார். அவரது சடலம் தற்போது சங்கானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.