
யாழில் மணிக்கணக்காக மக்களை காக்க வைத்த சஜித் : திரும்பிச் சென்ற மக்கள்!
-யாழ் நிருபர்-
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரதேவின் தேர்தல் பிரச்சார கூட்டமானது இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் – துணவி சென் நியூ ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த கூட்டத்தினை பி.ப 3.30 மணியளவில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மக்களும் குறித்த கூட்டத்திற்கு வருகை தந்திருந்ததுடன், பேருந்து மூலமும் மக்கள் குறித்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இருப்பினும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித், குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட நேரத்தினை தாண்டி ஒரு மணிநேரம் கடந்த பின்னரும் வருகை தரவில்லை. இதனால் மக்கள் களைப்படைந்து விரக்தியில் இருந்ததை அவதானிக்க முடிந்தது.
இன்னும் சிலர் கூட்டத்தில் கலந்து கொள்ளாது திரும்பிச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.



மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

