யாழில் பேருந்தில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு

யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று முந்தினம் திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு காலை அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் வந்துகொண்டிருந்தார்.

இதன்போது செம்மணிப் பகுதியில் வந்துகொண்டிருக்கும்போது பேருந்தின் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சித்துள்ளார். இதன்போது பேருந்து செம்மணி வளைவில் திரும்பும்போது கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார்.

அதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முந்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.