யாழில் புதிய பிரதேச செயலாளர் நியமனம்

யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி. சிவகாமி உமாகாந்தன் இன்று திங்கட்கிழமை அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.

இவர் 2019.4.12 -2025.10.24 வரை கடந்த ஆறு வருட காலமாக கரவெட்டியில் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றி இன்று யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.