யாழில் பிறந்து 16 நாட்களேயான ஆண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.

யாழில் பிறந்து 16 நாட்களேயான ஆண் சிசு ஒன்று கடந்த 16ஆம் திகதி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மின்சார நிலைய வீதி, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த நிரோராஜ் செல்வரதி என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

01.09.2024 அன்று குறித்த குழந்தை தெல்லிப்பழை வைத்தியசாலையில் பிறந்தது. தாயார் குழந்தைக்கு பாலூட்டியவேளை பால் வெளியே வந்தது. இதனால் குழந்தைக்கு இரைப்பை குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்து தாயும் சேயும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர்.

இந்நிலையில் குழந்தை 16.09.2024 அன்று இறந்துள்ளது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகள் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற நிலையில் கிருமித் தொற்றே மரணத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்