யாழில் பிரபல போதைப்பொருள் வியாபாரியான 27 வயது நபர் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்தார் என தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை கோண்டாவில் ரயில் நிலையத்தில் வைத்து அதே இடத்தைச் சேர்ந்த 27 வயதுடையவரே கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் பெற்றுக்கொண்ட 75 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்யும் முதன்மை சந்தேக நபர் நீண்ட நாள்கள் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் .