
யாழில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்டவர் கைது!
-யாழ் நிருபர்-
யாழில் தொலை பேசி திருட்டில் ஈடுபட்ட ஒருவர் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு திருடப்பட்டதொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது
தொலைபேசியை பறிகொடுத்தவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரினால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளனர்
நேற்று முன்தினம் திங்கட்கிழமை பரமேஸ்வரா சந்தியில் கடையொன்றில் தொலை பேசி திருட்டு இடம்பெற்றது
சிசிடிவி கமரா உதவியுடன் சந்தேகநபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்தனர்
அவரிடம் போன் எதுவும் கிடைக்கவில்லை தெரியாத நபர் ஒருவருக்கு போனை 10000 ரூபாவிற்கு விற்றுள்ளார்
நேற்று செவ்வாய்க்கிழமை தொலைபேசி திருத்துமிடத்திற்கு குறித்த சந்தேக நபர் தொலைபேசியுடன் வந்த பொழுது யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தின் முற்படுத்தப்பட உள்ளார்
