யாழில் தனியார் பேருந்தும், காரும் மோதி கோர விபத்து!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் கோப்பாய் பகுதியில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை கோர விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனியார் பேருந்தும் காரும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சிலரும் காரில் பயணித்த ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் முன்னெடுத்து வருகின்றனர்.