யாழில் தனியார் காணியில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் மீட்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் வெடி பொருட்கள் அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதையடுத்து  பொலிசார் யாழ் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

அந்தவகையில் இன்று குறித்த வெடிபொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெறும் மீட்பு பணியில் யாழ்ப்பாண பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பொலிசார் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.