யாழில் சகோதரர்களுக்கு இடையில் மோதல்: இறுதியில் நடந்த விபரீதம்

யாழ்பாணத்தில் சகோதரர்கள் இருவர் கத்திகுத்துக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டு, கைக்கலப்பு இடம்பெற்றது. அதன் போது, இரு சகோதரர்களின் சண்டையை விலக்கி சமாதனப்படுத்த சகோதரி முயற்சித்துள்ளார்.

இதன்போது சகோதரன் ஒருவர் தனது சகோதரி மற்றும் சகோதரன் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். அதில் காயமடைந்த இருவரையும் அயலவர்கள் மீது வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கத்தி குத்து தாக்குதல் நடத்திய சகோதரனை கைது செய்துள்ளனர்.