யாழில் குடும்பப் பெண்ணுக்கு தீ மூட்டியவர் கைது
யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சந்தேக நபரை பொலிசார் இன்று சனிக்கிழமை கைது செய்தனர்
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
42 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு யாழ். குருநகர் கொஞ்செஞ்சி மாதா சவக்காலைப் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.
இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண் பெண் மீது தலையில் பெட்ரோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
பெண் தீயில் எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ். போதன வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒரவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்