யாழில் கரையொதுங்கிய மர்மப் பொருள்

-யாழ் நிருபர்-

யாழ். வடமராட்சி கிழக்கு – உடுத்துறை வேம்படி கடற்கரை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

கடலில் நிலவும் கடும் காற்று மற்றும் கொந்தளிப்பால் குறித்த பொருள் கரைக்கு அடித்துவரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மக்கள் யாரும் அருகில் செல்ல வேண்டாம் என்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.