யாழில் கசிப்புடன் பதினைந்து வயது சிறுவன் கைது

யாழ்ப்பாணம் சரசாலை பகுதியில் கசிப்பு உடைமையில் வைத்திருந்த 15 வயதுடைய சிறுவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்shர்.

விசாரணையின் போது சிறுவனிடமிருந்து நான்கு லீட்டர் 500 மில்லி லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் சிறுவனிடம் கசிப்பினை கொடுத்த நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.