யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – மணியம் தோட்டம் பகுதியில் இருந்து 21 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் ஒரு கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதை பொருளுடன் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.