
யாழில் இளைஞர்களுக்கு நேர்ந்த துயர்
பண்ணை கடலில் விழுந்து இரண்டு இளைஞர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர். கொட்டடி பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும், இளைஞர்கள் குழு ஒன்று பண்ணை கடலில் பொழுதுபோக்கு விளையாட்டுக்களில் ஈடுபட்டது. இந்நிலையில் சிறிய படகு ஒன்றில் குறித்த இளைஞர்கள் கடல் விளையாட்டில் ஈடுபட்டனர். இதன்போது படகு கடலில் சரிந்தது.
இதன்போது 4 இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர். இரண்டு இளைஞர்கள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். இருப்பினும் சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
