யாழில் இளம் வைத்தியர் எடுத்த தவறான முடிவு

 

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் பணியாற்றிய இளம் மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் கொழும்பு வெள்ளவத்தையை சேர்ந்த பிரேம்குமார் கிருசாந் (வயது 30) என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து யுவதி ஒருவர் வைத்தியசாலைக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த இளம் வைத்தியரின் அறை கதவை ஊழியர்கள் உடைத்து சென்று உள்ளே பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

அவரது மூக்கினுள் பஞ்சு அடைக்கப்பட்டிருந்ததாகவும், மேலும் அவர் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டமைக்கு காதல் விவகாரம் காரணமாக இருப்பதாக சந்தேகிக்கப்படவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார், சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்