யாழில் இடியன் துப்பாக்கி வெடிப்பு: ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.