யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்தனர்.

இதன்போது எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அருகில் பயணித்த வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட வேளை நிலைகுலைந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளுடன் நடு வீதியில் விழுந்தனர்.

இதன்போது எதிர் திசையில் வந்த கனரக வாகனம் குறித்த தாயின் தலையின் மீது ஏறி விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.