யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் வடமராட்சி கிழக்கை சேர்ந்த யூட் பேரின் 27 வயதுடைய இளைஞனே பரிதாபகரமாக உயிரிழந்தார்பிரபல கால்பந்தாட்ட வீரரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இளைஞனின் மரணம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை இந்த விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று விதியை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்துள்ளது.

மேலும் விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.