யால சரணாலயத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை

கதிர்காமம் – வெஹெரகல நீர்த்தேக்கத்தை அண்மித்த யால சரணாலயத்தில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் விசேட தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.

வெஹெரலகல வாவியிலிருந்து முன்னர் மெகசின் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய இந்த தேடுதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்போது, வெஹெரகல்ல வாவியிலிருந்து 215 T-56 ரக வெற்று மெகசின்கள், 38 LMG l வெற்று மெகசின்கள், 06 T-81 மெகசின்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் நாளை வெல்லவாய நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.