யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய, திவுல்வெவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் திவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய இரண்டு பிள்ளைகனின் தந்தை ஆவார்.
இவர் அதிகாலை வேளையில் சைக்கிளில் வயலுக்குச் சென்றுக்கொண்டிருந்த போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது இந்த வாரத்தில் காட்டு யானை தாக்குதலால் இடம்பெற்ற இரண்டாவது மரணம் என பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
