
யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு
ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள நெற்பயிர்களை தனியாக பராமரிக்க முற்பட்ட நான்கு பிள்ளைகளின் தாய் யானை தாக்கி இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக கல்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கல்கமுவ, பொரத்துகடவல பிரதேசத்தில் வசித்து வந்த எஸ்.ஆர்.பி.டபிள்யூ.எம். சந்திரவதி குமாரிஹாமி (வயது 74) என்ற பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருடைய நான்கு பிள்ளைகளும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், அவர் மட்டும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருவதாகவும் வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் உள்ள ஒரு ஏக்கர் வயலில் பயிர்களை விதைத்து, வீட்டுக்குச் சென்ற போது யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
