யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
-மூதூர் நிருபர்-
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தங்கநகர் பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான நாகேந்திரன் லிங்கரெத்தினம் (வயது 57 ) சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் சேனைக் காவலுக்கு சென்ற வேளையிலேயே யானைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.